பெங்களூரூ:
ஹிஜாப் வழக்கில் நாளை காலை 10.30 மணி அளவில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் மூஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
இதனையடுத்து கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில தரப்பு மாணவ- மாணவிகள் காவி நிற துண்டு அணிந்துவந்து , ஹிஜாப் போராட்டதிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இப்படி இந்த விவகாரம் கர்நாட்க மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் தொடர்ந்து 11 நாட்கள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஹிஜாப் ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு இடையே வன்முறை தீவிரமடைந்ததால், பாஜக தலைமையிலான கர்நாடக அரசு பள்ளிகளை சில நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஹிஜாப் ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு இடையே வன்முறை தீவிரமடைந்ததால், பாஜக தலைமையிலான கர்நாடக அரசு பள்ளிகளை சில நாட்களுக்கு மூட உத்தரவிட்டது.
இந்நிலையில், ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
பெங்களூருவில் நாளை முதல் மார்ச் 21ம் தேதி வரை போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.