2030ம் ஆண்டிற்குள் 20,000 மெகாவாட் சூரியசக்தி மின் நிலையங்கள் -தமிழக அரசு திட்டம்

சென்னை:
தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை குறைத்து புதுபிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகரிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் நிறுவும் இடங்களை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 1 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கான செலவு சுமார் 3.5 கோடி ரூபாய். மார்ச் 20-ந் தேதிக்குள் டெண்டரை முடித்து ஏப்ரல் முதல் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் திட்ட ஆலோசகரின் பரிந்துரையைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிலையம் நிறுவும் இடம் இறுதி செய்யப்படஉள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை கட்டி முடிக்கவும், 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 20,000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டப்பணிகளை 2030-க்குள் முடிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காலக்கெடு விதித்துள்ளது.
1 மெகாவாட் மின் நிலையத்தை நிறுவ 5 ஏக்கர் நிலம் தேவை, 20000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுமார் 1,00,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.