ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் தங்களுக்கு கூடுதல் உதவி அளிக்குமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 19வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் தங்களுக்கு கூடுதல் உதவி அளிக்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாவது, 3ம் உலகப் போரில் இழுத்து விடப்படுவோம் என்று பயத்தில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வெற்றிகரமாக சண்டையிட்டு வருகிறது.
To those abroad scared of being ‘dragged into WWIII’. Ukraine fights back successfully. We need you to help us fight. Provide us with all necessary weapons. Apply more sanctions on Russia and isolate it fully. Help Ukraine force Putin into failure and you will avert a larger war.
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 14, 2022
நாங்கள் சண்டையிட எங்களுக்கு உங்கள் உதவி தேவை. ரஷ்யா மீது கூடுதல் பெருளாதார தடைகளை விதித்து, முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும்.
புடினை தோற்கடிக்க உக்ரைன் படைக்கு உதவுங்கள், பெரிய போரை நீங்கள் தவிர்ப்பீர்கள் என Dmytro Kuleba தெரிவித்துள்ளார்.