பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களில் பலரும் இன்று நஷ்டத்தில் தான் உள்ளனர். ஏன் அப்படி? உண்மையில் பங்கு சந்தையில் லாபம் கண்டவர்களே இல்லையா? என்றால் நிச்சயம் இது உண்மையல்ல, ஏனெனில் இன்றும் சத்தமேயில்லாமில்லாமல் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களும் சந்தையில் இருக்கத்தான் செய்கின்றனர்.
எனினும் நல்ல லாபகரமான முதலீட்டுக்கு நீண்டகால முதலீடே பெஸ்ட் ஆப்சன். இது தான் ரிஸ்க் குறைவானதாகவும் பார்க்கப்படுகிறது.
எனினும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் நல்ல நல்ல நிறுவன பங்குகள் கூட பலத்த சரிவினைக் கண்டுள்ளனவே? இதனை வாங்கி வைக்கலாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் முதல் பங்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான். இன்று சந்தை மதிப்பில் முதன்மை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் அதன் வணிகத்தினை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகின்றது. சில கையகப்படுத்தல்களையும் செய்து வருகின்றது. தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. மேலும் காலத்திற்கு ஏற்ப புதிய புதிய வணிகங்களிலும் காலடி வைத்து வருகின்றது. மொத்தத்தில் தங்களது வணிக வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள முயற்சி எடுத்து வருகின்றது.
RIL – வாங்கி வைக்கலாம்
இப்பங்கின் விலையானது சமீபத்திய சரிவினால் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் எந்த வித சரிவும் இல்லை. வேறு எந்த பிரச்சனையும் இல்லை. தொடர்ந்து முதலீட்டினை அதிகரித்து வருகின்றது. விரிவாக்கம் செய்து வருகின்றது. இந்த பங்கின் விலையானது தற்போது 2399.15 ரூபாயாக உள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2751 ரூபாயாகும். ஆக உச்சத்தில் இருந்து பார்க்கும்போது நல்ல சரிவில் காணப்படுகின்றது. இது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சரிந்துள்ள நிலையில், நீண்டகால நோக்கில் வாங்க சரியான பங்காக பார்க்கப்படுகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
எஸ்பிஐ-யும் நல்ல சாதகமான காரணிகளை கொண்டுள்ள பங்கு ஆகும். இப்பங்கின் விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இதன் தற்போதைய விலை நிலவரம் 470.35 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலை 549 ரூபாயாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்பங்கின் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11% மேலாக சரிவில் காணப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையும் சமீப காலமாக சற்று சரிவினைக் கண்டுள்ளது. இதன் ஃபண்டமெண்டல் காரணிகளும் சாதகமாகவே உள்ளன. ஆக இந்த பங்கினையும் குறைந்த விலையில் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது கடந்த அமர்வில் 677 ரூபாய் என்ற லெவலில் முடிவடைந்த நிலையில், 52 வார உச்ச விலை 867 ரூபாயாகும். இந்த நிலையில் குறைந்தபட்ச விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
Quality stocks with a decline of up to 30% , is it a right time to invest?
Quality stocks with a decline of up to 30% , is it a right time to invest?/30% வரை சரிவில் இருக்கும் தரமான பங்குகள்.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?