இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM