சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.