அதிரடி காட்டும் ரஷ்யா – Instagram இஸ் நோ மோர்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தவறான செய்தியை பரப்புவதாக ரஷ்ய நிறுவனங்களுக்கு பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களை தங்கள் நாட்டில் முடக்கியது. அதாவது, உக்ரைனுக்கு ஆதரவாக தகவல்களை பதிவிடும் அனைத்து தளங்களையும் முடக்கும் வகையிலும் புதிய ‘போலி செய்தி’ சட்டத்தை நிறைவேற்றியது.

போலி செய்தி சட்டம்

இந்த ‘
Fake News Law
‘ சட்டத்தைக் கொண்டு ரஷ்ய நாட்டிற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்படும் தளங்கள் அனைத்தும் முடக்கப்படும். அதுமட்டுமில்லாமல், பதிவிட்டவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தை வேரோடு பிடுங்கும் செயல் என டெக் நிறுவனங்கள் கடுமையாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

ரஷ்யாவை கைவிடும் டெக் நிறுவனங்கள்? நெருக்கடியை தாங்குமா அரசு!

இந்த சூழலில், கடந்த வாரம் பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமும் ரஷ்யாவில் தடை செய்யப்படும் என அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, இன்று
இன்ஸ்டாகிராம்
தளத்திற்கு ரஷ்யாவில் முழு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள 8 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள், தங்கள் கணக்குகள் மற்றும் சேகரித்து வைத்திருந்த தரவுகளை இழந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் தடை

இது குறித்து மார்ச் 11ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி, “திங்கட்கிழமை ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் தடை செய்யப்படும். இதனால் 80 மில்லியன் ரஷ்ய பயனர்கள் பாதிக்கப்படுவர். அதுமட்டுமில்லாமல், வெளிநாடுகளில் இருந்து ரஷ்யா பயனர்களை பின் தொடருபவர்களும் பாதிக்கப்படுவர். இது சரியான முடிவு இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பாக இணையத்தில் உலாவ சிறந்த VPN-கள்?
இன்ஸ்டாகிராம் தடை குறித்த தகவல்கள் ரஷ்யாவில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் பிற சமூக ஊடகங்களின் இணைப்புகளை பதிவிட்டு, இனி எங்களுடன் இதில் இணைந்திருங்கள் என்று தெரிவித்திருந்தனர். சிலரோ இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சிறந்த VPN-கள் குறித்த பதிவுகளை இணையத்தில் பரவவிட்டு வந்தனர்.

விடாது துரத்தும் ரஷ்யா

ரஷ்யாவின் புடின் அரசு விடாபடியாக உக்ரைன் மீது உக்கிர தாக்குதல் நடத்தி வருகிறது. எது வந்தாலும் பாத்துக்கலாம் என்ற மன தைரியத்துடன் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் சில, பொருளாதார தடைகளை விதித்தும், ரஷ்யா அதற்கு பயந்ததாகத் தெரியவில்லை.

Russia Ukraine War: இன்டர்நெட் கட்; டிக்டாக் குளோஸ் – ரஷ்ய நடவடிக்கையால் அதிருப்தி!
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களான கார்கிவ், கிவ் ஆகிய இடங்களை ரஷ்யா ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில், அங்கிருந்த பெரும்பான்மையான இந்திய மாணவர்கள் உயிர் பிழைத்து தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

கெத்து காட்டும் Elon Musk – உக்ரைனுக்கு Starlink இண்டர்நெட் ரெடி…Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்ய கணினிகளை துவம்சம் செய்ய

ரஷ்யா உக்ரைன் போர் குறித்த உங்கள் பார்வையை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.