பிரிந்து வாழும் தனுஷையும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தையும் சேர்த்து வைப்பது கடினமாகிவிட்டது. இருவருமே மீண்டும் சேர்ந்து வாழ விரும்பவில்லையாம்.
எங்கள் மகளை திருமணம் செய்ததால் கெரியரில் வளர்ந்த
தனுஷ்
இப்படி நன்றிகெட்டத்தனமாக இருக்கிறாரே என்பதை தான் லதா ரஜினிகாந்தால் ஏற்க முடியவில்லையாம். இதையடுத்து அவரின் கெரியரை காலி செய்யும் வேலையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை அணுகி தனுஷுடன் வேலை செய்யக் கூடாது என்று கூறியிருக்கிறாராம் லதா.
Dhanush:தனுஷுக்கு எதிரான லதாவின் 3வது அஸ்திரமும் ஒர்க்அவுட்டாகிடுச்சு
இதையடுத்து தனக்கு ராசியான இயக்குநரான வெற்றிமாறனை அணுகி, நாம் மீண்டும் படம் பண்ணலாமா என்று கேட்டாராம் தனுஷ். ரஜினி குடும்பத்தின் மீது பெரும் மரியாதை வைத்திருக்கும் வெற்றிமாறனோ, இப்போ நான் பிசி என்று கூறி நைசாக எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
தனுஷின் கெரியர் எப்பொழுது எல்லாம் அடி வாங்குகிறதோ, அப்பொழுது எல்லாம்
வெற்றிமாறன்
இயக்கத்தில் நடிப்பார். அந்த படம் ஹிட்டாகி, கெரியர் சரியாகிவிடும். இந்நிலையில், தான் பெரிதும் நம்பிய வெற்றிமாறனே கையை விரித்துவிட்டது தனுஷுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறதாம்.
இதற்கிடையே தனுஷ் நடிப்பில் மார்ச் 11ம் தேதி வெளியான மாறன் படமும் ரசிகர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.