‘அபார சக்தி கொண்டவர்’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “
கருத்துக் கணிப்புகள் வரும் வரை உ.பி.யில் கடும் போட்டி நிலவுவதாக பெரும்பாலானோர் கூறினர். சிலர் சமாஜ்வாதி முன்னிலையில் இருப்பதாக கூறினர். இவ்வளவு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வரும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.
பிரதமர் மோடி அபார சக்தியும் சுறுசுறுப்பும் கொண்டவர். மிகவும் கவனம் ஈர்க்கும் சில காரியங்களை, குறிப்பாக அரசியல் விஷயங்களை அவர் செய்துள்ளார். இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பேரவையில் சமாஜ்வாதி கட்சியின் இடங்கள் அதிகரித்துள்ளன. அவர்கள் தங்களை நல்ல எதிர்க்கட்சியாக நிரூபிப்பார்கள்” என்று அவர் கூறினார்.