Tamil Health Recipe Lemon Leaf Thuvaial : பெருகி வரும் ரசாயன காலகடடத்தில் நம் உண்ணும் உணவே நாளடைவில் விஷமாக மாறிவிடுகிறது. அதிலும் இப்போது இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட உணவுகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சுவைக்காக பலரும் விரும்பி சாப்பிடத்தான் செய்கிறார்கள்.
ஆனால் கடந்த 2 வருடங்களாக உலகையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு பொருட்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா தொற்றின் அபாயம் அதிகரித்த போது ஆங்கில மருந்துகளை விட இயங்கை மூலிகை தன்மை கொண்ட இந்திய சமையறை மசாலா பொருட்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.
இதன் மூலம் பெரும்பாலான மக்கள் தற்போது இயற்கை உணவு பொருட்களை தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அதிக மருத்துவ குணம் கொண்ட எலுமிச்சை இலையில் துவையல் செய்யலாம் என்பது தெரியுமா? பொதுவாக எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆனால் எலுமிச்சை இலையில் உணவு பொருட்கள் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாததாக இருக்கலாம்.
எலுமிச்சை இலை துவையல் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை / நார்த்தங்காய் இலைகள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
ஓமம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையாள அளவு
செய்முறை
முதலில், எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் இலைகளை நன்றாக கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் உலர்ந்த இலைகளை சேர்த்து நன்றாக வறுககவும்.
அதன் பிறகு அதனை தனியாக எடுத்து வைத்துவிட்டு. அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், ஓமம், பெருங்காயம் ஆகிய மூன்றையும் சேர்த்து வறுக்க வேண்டும்.
இவை மூன்றும் நன்றாக வறுபட்டவுடன், அதில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியுதும் இலைகளை தனியாக எடுத்துவிட்டு மீதமுள்ள ஓமம், பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைக்கவும்.
நன்றாக அரைந்ததும் அதில் கடைசியில் இலைகளை சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையாக எலுமிச்சை இலை துவையல் தயார். இதனை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.