சென்னை:
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.