விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறது. அதனால் அதற்காக பல ஆண்டுகளாக ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
விஜய்
மக்கள் இயக்கத்தினரை போட்டியிட வைத்ததும் அதற்குத் தான். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.
வருங்கால முதல்வரே என்று விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரசிகர்கள் போஸ்டர் அடிக்கிறார்கள். இந்நிலையில் அரசியல் எக்ஸ்பர்டான
பிரசாந்த் கிஷோர்
விஜய்யை ஹைதராபாத்தில் வைத்து சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒன்றரை மணிநேரம் நடந்த அந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் பற்றி பேசினார்களாம். இந்த தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த சந்திப்பை சரியாக கணித்துவிட்டார்கள் மதுரை மத்திய தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரசாந்த் கிஷோர் இடையே விஜய் இருப்பது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். அந்த போஸ்டரில் கூறப்பட்டிருந்ததாவது,
ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்…கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என்று இருந்தது.
Vijay:விஜய் ஒரு சூப்பர் ஸ்டார், ஏன்னா…: பூஜா ஹெக்டே சொன்ன சூப்பர் விஷயம்