வாஷிங்டன்:
இந்தியாவில் இருந்து கடந்த 9-ந் தேதி ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் நாட்டு பகுதியில் விழுந்தது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வழக்கமான பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டதாகவும், இது வருத்தத்தக்க சம்பவம் என இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை பாகிஸ்தான் ஏற்க மறுத்தது.
இந்த நிலையில் விபத்து காரணமாக இது நடந்தது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது தற்செயலானதே தவிர வேறு எதுவும் காரணமில்லை. இந்த சம்பவம் வெறும் விபத்துதான். ஏவுகணை ஏவப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. என்ன நடந்தது என்பது குறித்து துல்லியமான அறிக்கையை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.