நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படுமா? என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மந்திரி நித்யானந்த் ராய் ‘‘தற்போது வரைக்கும் மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி அசாம் மாநிலத்திற்கென தனியாக என்.ஆர்.சி. வெளியிடப்பட்டது. அந்த மாநிலத்தில் மட்டும்தான் கணக்கெடுக்கப்பட்டது’’ என்றார்.
2019-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் 3.30 பேர் விண்ணப்பம் செய்ததில் 19.06 லட்சம் பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது அரசியலில் பெரும் புயலை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… வாரிசு அரசியல் ஆபத்தானது- பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு