உடுப்பி : இறைச்சிக்காக கால்நடைகளை கடத்தும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இறைச்சிக்காக கால்நடைகளை கடத்துவோரை பிடிப்பதற்காக, நகரில் ‘டீம் கருடா’ என்ற ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளம் வாயிலான குழுவை பிரம்மாவர் சர்க்கிள் போலீஸ் நிலையம் அமைத்தது.இதன் மூலம் கால்நடை கடத்தல், சட்ட விரோத இறைச்சி மையம் அமைத்தோர் குறித்த விபரங்களை தெரிவிக்கலாம்.
இதில் கிடைக்கும் தகவலை வைத்து அதிகாரி குழுவினர் நடவடிக்கை எடுப்பர்.சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பத்மநாபா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசினர்.இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, கால்நடையை கடத்துவது தெரியவந்தது. இது தொடர்பாக 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட முகமது ஷெரீப், முஜாஹித் ரஹ்மான், அப்துல் மஜித், சையது அக்ரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், கார், நான்கு கத்தி உட்பட 3.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement