இன்னும் சற்று நேரத்தில் மூழ்கவே மூழ்காது என்ற தம்பட்டம் அடித்த அந்த பிரம்மாண்டமான ‘டைட்டானிக்’ கப்பல் மூழ்கப் போகிறது. உயிர் பிழைப்பதற்காக மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆறேழு இசைக்கலைஞர்கள் கப்பலின் ஓரமாக வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் வயலின் வாசித்தவர்கள் தங்களுக்குள்ளே கிளம்பலாம் என்று முடிவெடுத்துக் கட்டியணைத்துப் பிரிந்துசென்ற பின், ஒரு கலைஞர் மட்டும் தனியாக வயலின் வாசிப்பார். கிளம்பிய அத்தனை பேரும் அந்த தனி இசைக்கலைஞரைக் கண்டு கப்பலில் தப்பிச்செல்லாமல் மீண்டும் மறுபடியும் இசைமழையைத் தொடங்குவார்கள். அப்போது வாசிக்கப்படும் அந்த இசையை உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அற்புதமான “Naunce”-களில் இந்தக் காட்சியும் உண்டு.
இதே போல, மற்றொரு திரைப்படம். யூத இனப் படுகொலையை மையமாக வைத்துப் பல திரைப்படங்கள் வந்தாலும் ‘தி பியானிஸ்ட்’ யாராலும் மறக்க முடியாதது. அதிலும் இதேபோன்று ஒரு “Naunce” வருகிறது. யூத இனத்தைச் சேர்ந்த பியோனோ கலைஞன் ஒருவர், நாஜிக்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்து யாருக்கும் தெரியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் பிழைத்துக் கொண்டிருப்பார். ஊரே போர்த்தாக்குதல்களில் நிலைக்குலைந்து போயிருப்பதால் இடிந்த வீடுகளுக்குள் மறைந்திருந்து அங்கிருக்கும் உணவுகளைத் தின்று உயிர்வாழ்ந்து கொண்டிருப்பார். இப்படியிருக்க, ஒருநாள் ஒருவீட்டில் அழுக்கடைந்த நிலையில் பியோனா ஒன்று கிடக்கிறது. பியோனா கலைஞனின் விரல்கள் வாசிப்பதற்கு அவ்வளவு ஏங்குகின்றன. வெளியில் ஹிட்லரின் நாஜிப்படைகளின் அதிகாரிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். பியோனாவை வாசித்தால் சத்தம் கேட்டு உள்ளே வரும் அதிகாரிகள் பியோனா கலைஞனின் உயிரை எடுத்துவிடுவார்கள். வாசிக்காமலும் இருக்க முடியவில்லை. என்ன செய்வது.? மறக்காமல் இந்தக் காட்சியைப் பாருங்கள். உங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாத பேரனுபவம் அது.! வெறும் விரல்களை பியோனா மீது வைத்து விரல்கள் காற்றில் மிதந்தபடி வாசிக்கும். ஆனால், இசையின் சத்தம் நமக்குக் கேட்கும்.!
மேலும் படிக்க | ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்
போர்ச்சூழலில் இதுபோன்ற மறக்கமுடியாத காட்சிகளை இதுவரை சினிமாவில் மட்டுமே ரசித்துவந்த நமக்கு, தற்போது நேரிலும் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. உக்ரைன் நாட்டில் நிலவும் போர்ச்சூழலில் ரஷ்யாவின் குண்டுகள் கிவ் நகரின் வீடுகளைத் தாக்குகின்றன. வீடுகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் மக்கள் பெரும் துயரத்துடன் வெளியேறி வருகின்றனர். அப்படியிருக்க, கிவ் நகரில் இசைக்கலைஞர் ஐரினாவின் வீடும் தாக்கப்படுகிறது. நல்ல வேளை அவரது பியோனாவுக்கு ஒன்றும் ஆகவில்லை. வீட்டை விட்டு வெளியேறும் சூழல். பியோனாவை கடைசி முறையாகப் பார்த்த ஐரினா, கண்ணீருடன் அமர்ந்து அதை வாசிக்கிறார்.! இந்தக் காட்சியை அவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். கடைசியாக ஒன்று.! “Naunce” என்றால் என்ன கேட்பவர்கள், கீழே இருக்கும் இந்தக் காட்சியைப் பாருங்கள். முடிந்தவுடன் உங்களுக்கு ஏற்படும் உணர்வே அது.!
எந்தத் துயரங்களுக்கு இடையிலும் ‘கலை’ அதன் மேன்மையை ஒருபோதும் இழப்பதில்லை.!
மேலும் படிக்க | இந்தியாவிற்கு 20-25% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR