உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் ஏறத்தாழ 28 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியது அதிகபட்சமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வரை தஞ்சம் கேட்டு மற்ற நாடுகளுக்கு சென்றதாகவும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஒரு நாளில் நிகழ்ந்த உச்சபட்ச இடம்பெயர்வு என ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக போலந்தில் 18 லட்சம் பேர் புகலிடம் கேட்டும் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 லட்சம் குழந்தைகள் கல்வி, ஊட்டச்சத்து மிக்க உணவு உள்ளிட்டவற்றை இழந்துள்ளதாக ஐ.நா. குழந்தைகளுக்கான நிதியம் தெரிவித்துள்ளது.