உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு, வருகிற 17 ஆம் தேதி காலை 7 மணி வரை 36 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என்று கீவ் நகர மேயர் அறிவித்து இருக்கிறார்.
வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க, முகாம்களுக்கு செல்ல மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.