தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், , சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை
தேவயானி
. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி என சொல்லும் அளவிற்கு தனது க்யூட் நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் இவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் தேவயானி.
இயக்குனர் ராஜகுமாரனும், தேவயானியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போதும் தேவையானி பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், படங்களை தவிர பல சின்னத்திரை தொடர்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
தேவயானி, ராஜகுமாரனின் காதல் திருமணத்திற்கு இரு விட்டார்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையெல்லாம் தாண்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு வீட்டார் குடும்பத்தினரும் தேவயாணி, ராஜகுமாரனிடம் பேசுவதில்லை. இந்நிலையில் யூடிப்பில் பிரபலமான சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
ராஜகுமாரன்
, பல முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சிம்புலாம் கிடையாது.. எங்க அண்ணன் தான் பர்ஸ்ட்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிரடி முடிவு..!
அதில் நடிகரும் தேவயானியின் தம்பியுமான
நகுல்
பற்றி பேசும் போது, அவர் இன்னமும் என்னுடன் பேசுவது இல்லை. நான் செய்தது தேசத் துரோகமாக அவர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னை தேச துரோகக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவன் ஆகவே பார்க்கிறார். மாமியார் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் அவர் மட்டும் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல் அவரவர் வாழ்க்கையில் தனியாக சென்று விட்டார்கள்.
தேவயானி வீட்டில் யாரும் எங்களுடன் தொடர்பில்லை. தேவயானி இன்னொரு தம்பி பூனேவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவர் தம்பி போனில் எப்போவது பேசுவார். ஆனால், நகுல் அவ்வளவாக தேவயானியுடன் பேசுவது கிடையாது. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், கலை உலகம் தான் உறவுகள் என்று கூறியிருந்தார். ராஜகுமாரனின் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
“எதற்கும் துணிந்தவன்” சூர்யா ரசிகர்களின் ரியாக்சன்!