புதுச்சேரி-வில்லியனுார் பைபாசில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.வில்லியனுார் பைபாஸ் நடுவில் எம்.ஜி.ஆர்., சிலை அமைந்துள்ளது. இச்சிலை, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்றி, வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப் பட்டது. அதிகாரிகள் மெத்தனத்தால் இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், மேற்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.அப்போது, வில்லியனுார் பைபாசில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.முதல்வர் ரங்கசாமி, இது தொடர்பாக பொதுப்பணித் துறையின் அறிக்கையை பெற்ற பிறகு, எம்.ஜி.ஆர். சிலையை ஓரமாக வைப்பதா அல்லது ரவுண்டானாவில் வைப்பதா என முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
புதுச்சேரி-வில்லியனுார் பைபாசில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.வில்லியனுார்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.