அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 6 மாவட்டங்களில் உள்ள 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ. 58,23,97,052 கோடி (3928%) சொத்துக் குவித்த காரணத்தால், எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது, 6 மாவட்டங்களில் உள்ள 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கேரளாவில் உள்ள எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எஸ் பி வேலுமணியை தொடர்ந்து சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.