தெலங்கானா: ஹிஜாப் சர்ச்சையே தேவையற்றது எனும் விதமாக, ’ஏன் இந்த ஹிஜாப் சர்ச்சை?’ என்று தெலங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக, தெலங்கான சட்டப்பேரவையில் அவர் இன்று பேசும்போது, ”யார், என்ன விதமான ஆடை அணிந்தால், அரசுக்குப் பிரச்சினை என்ன? ஏன் இந்த ஹிஜாப் சர்ச்சை, ஏன் தேவையின்றி சூழலைப் பதற்றமாக்குகிறீர்கள்?” என்று வினவினார்.
முன்னதாக, கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இது தொடர்பான தீர்ப்பு இன்று நீதிபதிகள் வழங்கினர். அதில் “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வர தடை விதித்து பிப்ரவரி 5, 2022-ல் விதிக்கப்பட்ட தடை செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.