மும்பை: ஓடிடி நிறுவனம் தொடங்க இருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். ரெட் சில்லிஸ் என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் நடத்தி வருகிறார் ஷாருக்கான். இந்நிறுவனம் மூலம் தனது நடிப்பில் உருவாகும் படங்களை தயாரிக்கிறார். அதே சமயம் மற்ற ஹீரோக்களை வைத்தும் படங்களை தயாரிக்கிறார். சமீபத்தில் பாபி தியோல் நடிப்பில் லவ் ஹாஸ்டல் என்ற படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியையும் ஷாருக்கான் வைத்திருக்கிறார். இந்நிலையில் புது பிசினஸில் அவர் ஈடுபட உள்ளார். சொந்தமாக ஓடிடி நிறுவனத்தை அவர் தொடங்குகிறார். இந்த ஓடிடி தளத்துக்கு எஸ்ஆர்கே பிளஸ் என பெயரிட்டுள்ளார். இதில் இயக்குனர் அனுராக் கஷ்யப் பார்ட்னராக சேர்ந்துள்ளார். இந்த தகவல் அறிந்து ஷாருக்கானை சல்மான் கான் வாழ்த்தியுள்ளார்.