சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்து. நாட்டில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவின்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் , சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.