இந்திய திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக் கான் தனது புதிய ஓ.டி.டி தளம் குறித்த முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். SRK+ என்ற பெயரில் அவர் இந்த தளத்தை தொடங்கவுள்ளார். இதனை ட்வீட் மூலம் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஓ.டி.டி தளத்தின் மூலம் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மாதிரியானவற்றை வெளியிட்டு வருகின்றன. நடிகர் அல்லு அர்ஜூன் கூட ‘ஆஹா’ என்ற ஓ.டி.டி தளத்தை அவர்களது குடும்ப தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடத்தி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் அந்த தளம் இயங்கி வருகிறது.
சல்மான் கான், கரண் ஜோஹர், அனுராக் காஷ்யப் மாதிரியானவர்கள் ஷாருக் கானின் ஓ.டி.டி முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.