ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சரக்கு ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு லுவாலாபா மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏராளமான மக்களும் சட்டவிரோதமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கின்டேட்டா என்ற இடத்தில் சென்றபோது ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் நிகழ்விடத்திலேயே 60 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 கூடுதலாக மரணித்தததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.