போபால்:கால்நடைகளின் மருத்துவ சிகிச்சைக்கு, ஆம்புலன்சை பயன்படுத்தும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்கள், அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கின்றனர். அதுபோல கால்நடைகளுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கு நடமாடும் கால்நடை உதவி வாகனம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர், உதவியாளர், டிரைவர் ஆகியோர் இருப்பர். கால்நடைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ தொலைபேசி எண் அறிவிக்கப்படும். இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக, அதற்கான ஆம்புலன்ஸ் உதவிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
போபால்:கால்நடைகளின் மருத்துவ சிகிச்சைக்கு, ஆம்புலன்சை பயன்படுத்தும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.