புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மற்றும் சித்தி எய்தாத மாணவர்கள் என்ற ரீதியில் ஊடகத்தின் மூலம் விரிவை ஏற்படுத்த வேண்டாம் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கேட்டுக்கொண்டார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்ததுடன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் இம்முறை இந்த பரீட்சைக்கு தொற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற யாழ் கொக்குவில் மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது