நேற்று (14) இலங்கையில் கொவிட் – 19 க்கு எதிராக மேலும் 25 ஆயிரத்து 14 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 302 பேருக்கும், இரண்டாவது டோஸ் 903 பேருக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோapay; பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (14) பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை 2 ஆயிரத்து 503 பேர் பெற்றுக்கொண்டனர், அதே நேரத்தில் இரண்டாவது டோஸினை 7 ஆயிரத்து 831 பேர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், 13 ஆயிரத்து 475 பேர் பைசர் பூஸ்டர் தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்படி இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொணடவர்களின் மொத்த எண்ணிக்கை 76 இலட்சத்து 13 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 கோடியே 89 இலட்சத்து 22 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
K. sayanthiny