கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘
சர்தார்
‘ படத்தின்
டிஜிட்டல்
உரிமைகளை ஆஹா தமிழ் ஓடிடி தளம் பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்திதற்போது ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார்.
ராஷி கண்ணா
மற்றும்
ரெஜிஷா
விஜயன் இருவரும் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு
ஜிவி பிரகாஷ்
இசையமைக்கிறார். சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
Beast: அய்யோ தளபதி தீயா இருக்காரே.. லீக்கான போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்..!
அதில் ஒரு காவல்துறை அதிகாரி.சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார். தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சர்தார் படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பின்னான டிஜிட்டல் உரிமைகளை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சர்தார்’ படத்தின் டிஜிட்டல் உரிமைகளைஆஹா தமிழ் ஓடிடி தளம் 20 கோடிக்கு வாங்கியிருப்பதாகக்கூறப்படுகிறது. எனவே படத்தின் பெரும்பகுதியான பட்ஜெட் இதன் மூலமே கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கார்த்திக்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தி டப்பிங் உரிமைகளும் நல்ல விலைக்கு போகும் என்றும் கூறப்படுகிறது.
ஆஹா ஓடிடி தளம் தெலுங்கில் மிகப் பிரபலமாக உள்ளது. தற்போது தமிழிலும் களமிறங்கியுள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர்
அல்லு அர்ஜுனின்
குடும்பத்தினர் தான் ஆஹா ஓடிடி தளத்தைத் துவங்கியுள்ளனர். தமிழ் ஆஹா ஓடிடி தளத்தில் ரைட்டர் திரைப்படமும்,
கவின்
நடிப்பில் உருவாகியுள்ள ஆகாஷ்வாணி வெப் சீரிஸும் வெளியாகியுள்ளது. மேலும் பல சுவரசியாமான திட்டங்களையும் ஆஹா கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!