பெங்களூரு-”சாலைப்பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக, குடிநீர் வாரியம், பெஸ்காம் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது,” என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில் சாலை பள்ளத்துக்கு, மற்றொருவர் பலியாகியுள்ளார். இதற்கு காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். பெஸ்காம், குடிநீர் வாரியம் உட்பட, சம்பவம் தொடர்பாக, ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளது.நேற்றிரவு (நேற்று முன்தினம்), எம்.எஸ்.பாளையாவின், முனேஸ்வரா லே – அவுட்டில், நடந்த விபத்தில் வாலிபர் பலியானார். இது நடந்திருக்கக்கூடாது. ஆனால் நடந்துவிட்டது. குடிநீர் வாரியத்தின் தவறால், இச்சம்பவம் நடந்துள்ளது.சட்டத்தில் வாய்ப்பிருந்தால், இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சம்பவம், எலஹங்கா சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், நடந்துள்ளதால், இறந்த வாலிபர் குடும்பத்தினருக்கு, 20 க்கு 30 அடி அளவுள்ள வீட்டுமனையை இலவசமாக கொடுப்பதுடன், வீடும் கட்டித்தருவதாக, இத்தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ.,விஸ்வநாத் அறிவித்துள்ளார்.
Advertisement