13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நான்காம் நாள் திரையிடலில் ‘நச்சென்று’ அமைந்த கனடா நாட்டு திரைப்படம் ‘பீன்ஸ்’. இயக்குநர் டிரேசி டீர் மோஹாக் எனும் பழங்குடி இந்தியப்பெண். தன் இனத்தின் வரலாறுகளை ஆவணப்படம் மற்றும் தொலைக்காட்சித்தொடர்கள் மூலம் பதிய வைத்துள்ளார். 1990ல் கனடாவில் ஓல்கா எனும் பகுதியில் 78 நாள் நடந்த போராட்டத்தை தனது முதல் திரைப்படம் ‘பீன்ஸ்’ படத்தில் பதிவு செய்து உலகறியச்செய்து விட்டார்.தான் 12 வயதில் கண்ணால் கண்டதை திரைமொழியில் கூறியிருக்கிறார். போராட்டக்களத்தின் ஆவணப்படத்தொகுப்பு காட்சிகளையும், பிரமாண்டமாக செலவு செய்து உருவாக்கிய கலவரக்காட்சிகளையும் ஒன்றிணைத்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர் டிரேசி டீர்.
‘பீன்ஸ்’ என்ற செல்லப்பெயரால் அனைவராலும் அழைக்கப்படும் 12 வயதுச் சிறுமி, பதின்வயது வயதுப்போராட்டத்தையும், தன் இனத்திற்கான உரிமைப்போராட்டத்தையும் ஒருங்கே எதிர்கொள்கிறாள். மோஹாக் இன மக்களின் தொன்மை வாய்ந்த கல்லறைத் தோட்டத்தை அகற்றி, கோல்ப் மைதானத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடுகிறது ‘வெள்ளை அரசு’.
‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ போல் ஒட்டு மொத்த மோஹாக் இனமே திரண்டு போராட்டக்களத்தில் குதிக்கிறது.
முக்கியமான பாலத்தை கைப்பற்றி போக்குவரத்தை முடக்கி விடுகிறார்கள் போராட்ட வீரர்கள்.ராணுவத்தை இறக்கி விடுகிறது வெள்ளை அரசு. மத*கொண்ட யானைக்கூட்டத்தின் முன்பு சிறு நரிகள் கூடி கும்மாளம் மட்டுமே போடுகின்றன. வெள்ளை அரசு ‘வெள்ளைக்கொடியுடன்’ வர அமைதி நிலவுகிறது. பழங்குடி மக்களின் உரிமைகள் உடமையாக்கப்படுகின்றன.
படத்தின் இறுதிக்காட்சியில் ‘பீன்ஸ்’ வெள்ளை தனியார் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறாள். அனைத்து மாணவிகளும் வெள்ளை இனம். சிங்கம் போல் சிங்கிளாகப் போய் ‘என் பெயர் டெகான் தக்வா’ என அறிமுகம் செய்து கொள்கிறாள். அந்த முகத்தில் நீங்கள் யாரைக் காண்கிறீர்கள்!
Beans
Running time 92 minutes
Country Canada
Language English
Directed by Tracey Deer
Written by Tracey Deer, Meredith Vuchnich
Produced by Anne-Marie Gélinas
Starring Kiawenti:io Tarbell, Violah Beauvais, Paulina Jewel Alexis
Cinematography Marie Davignon
Edited by Sophie Farkas Bolla
Music by Mario Sévigny
Production company EMA Films