சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ‘
முசாபிர்
‘ என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்தப்பாடலை வெளியிடும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெற்றியடைய திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
‘முசாபிர்’ ஆல்பத்தின் பணிகள் விரைவில் முடிவுறும் நிலையில், ட்விட்டரில் இயக்குநரும் நடிகருமான லாரன்ஸ் உடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘வொர்க் மூட் ஆன் எனப் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து லாரன்ஸ் பேசும் போது, “என் தங்கச்சியை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். நாங்க சந்தித்த காரணத்தை தங்கச்சி அதிகாரப்பூர்வமாக சீக்கிரமே அறிவிப்பாங்க.
பாலியல் ரீதியான பிரச்னைகளை நானும் சந்திச்சு இருக்கேன்: திவ்யா துரைசாமி பகீர் தகவல்..!
அதுவரைக்கும், என்னால எதுவும் சொல்ல முடியாது. அவங்ககூட வொர்க் பண்ண போறோம்ங்குறதுல ரொம்ப சந்தோஷம். தலைவரோட பொண்ணுங்க ரொம்ப சந்தோஷமா இருக்கனும் என தெரிவித்திருந்தார். இதனால் ஐஸ்வர்யா விரைவில் லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ்வர்யா, சிம்புவை படம் இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில், அது உண்மை இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான லாரன்ஸை, ஐஸ்வர்யா இய்க்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“எதற்கும் துணிந்தவன்” சூர்யா ரசிகர்களின் ரியாக்சன்!