மதுரை: சிவகங்கை கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முறைகேடாக வெற்றி பெற்றதாக திமுக வேட்பாளர் சரஸ்வதி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் மோகன்குமாரை நீதிமன்ற ஆணையராக நியமித்து, அவரது முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். மறுவாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும், ஏப்.11-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.