சிவகாசி அருகே திருமணத்தை மீறிய உறவால் 2 பேர் தற்கொலை. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் பாரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – ராமலட்சுமி (32), தம்பதியர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சிவகாசி அருகே மேலப்பாளையாபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பன்னீர் செல்வம் என்பவருக்கும் ராமலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனால் இரண்டு குடுபத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ராமலட்சுமியும் பன்னீர் செல்வமும், மேலப்பாளையபுரம் கிராமத்திலுள்ள காட்டு பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அதிகாலையில் அப்பகுதிக்கு சென்ற மக்கள் இறந்து கிடந்த இருவரையும் பார்த்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாரனேரி போலீசார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM