நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்த மிக முக்கியமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் மூலம் பல கோடி மக்கள் பலன் அடைந்து வரும் நிலையில் கடந்த 7 வருடத்தில் மத்திய அரசு இத்திட்டத்தின் மீதான முதலீட்டுக்கான வட்டி வருமானத்தைக் குறைத்து வருகிறது.
3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!
இதனால் பெரும் கனவுகளுடன் முதலீடு செய்த பல கோடி சாமானிய மக்களுக்கு வருமானம் தொடர்ந்து குறைந்து வருவது மட்டும் அல்லாமல் பெண்களின் கல்விக்காகவும், திருமணத்திற்காகச் சேமிப்பு அளவு குறைந்து வருவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
மத்திய அரசு “பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ யோஜனா” கொள்கையின் ஒரு பகுதியாக, பெண்களுக்கான கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வரிச் சலுகை உடன் கொண்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்தை மத்திய அரசு 2015ஆம் ஆண்டுத் துவங்கியது.
பெண் குழந்தைகள்
பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்காக இதுபோன்ற இரண்டு கணக்குகளைத் திறக்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் கணக்கு தொடங்கும் ஆவணங்களைச் சமர்ப்பித்துக் குறிப்பிட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்குகள் 21 ஆண்டுகள் அல்லது பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து திருமணம் செய்யும் வரை செல்லுபடியாகும்.
வட்டி விகிதம்
இத்திட்டத்தில் 250 ரூபாய் முதல் அதிகப்படியாக வருடத்திற்கு 150000 ரூபாய் முதலீடு செய்யலாம். மார்ச் 31, 2022 இல் முடிவடையும் காலாண்டிற்குச் சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம் இப்போது 7.6% ஆக உள்ளது. இந்தத் திட்டத்திற்குக் காலாண்டு வாரியாக மத்திய அரசு வட்டியை அறிவிக்கும்.
மோடி அரசு
இத்திட்டத்தை அறிமுகம் செய்ய மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான வட்டி வருமானத்தை அளிக்க முடிவு செய்த மோடி அரசு 9.1 சதவீதம் வட்டியை அறிவித்து, அதன் பின் 9.2 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் தற்போது நிலைமை என்ன தெரியுமா.
SSY வட்டி விகித பாதை
03.12.2014 முதல் 31.03.2015 வரை – 9.10 சதவீதம்
01.04.2015 முதல் 31.03.2016 வரை – 9.20 சதவீதம்
01.04.2016 முதல் 30.09.2016 வரை – 8.60 சதவீதம்
01.10.2016 முதல் 31.03.2017 வரை – 8.50 சதவீதம்
01.04.2017 முதல் 30.06.2017 வரை – 8.40 சதவீதம்
01.07.2017 முதல் 31.12.2017 வரை – 8.30 சதவீதம்
01.01.2018 முதல் 30.09.2018 வரை – 8.10 சதவீதம்
01.10.2018 முதல் 30.06.2019 வரை – 8.50 சதவீதம்
01.07.2019 முதல் 31.03.2020 வரை – 8.40 சதவீதம்
01.04.2020 முதல் 31.03.2022 வரை – 7.60 சதவீதம்
வட்டி விகிதம் குறைந்தாலும் சந்தையில் கிடைக்கும் பிற சிறு முதலீடு திட்டத்தைக் காட்டிலும் சற்று அதிகமான வட்டி வருமானம் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்குக் கிடைக்கிறது.
Sukanya Samriddhi Yojana interest rate keeps falling
Sukanya Samriddhi Yojana interest rate keeps falling சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் தொடர் சரிவு.. இனியும் முதலீடு செய்யலாமா..?!