செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு – உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2011 – 2015 வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் உயர்நீதிமன்றத்தை நாடினார்.
image
பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று உயர்நீதிமன்றம் நால்வர் மீதான வழக்கையும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏப்ரல் முதல் வாரம் இறுதி விசாரணைக்கு பட்டியலிப்படும் என கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.