பிரிட்டன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா?
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனத்தின் அலுவலகத்தைக் கட்டுவதற்காக நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான DLF சுமார் 550 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்கிறது.

பின்டெக் கொள்கை
தமிழ்நாடு அரசு பின்டெக் கொள்கையை அறிவித்த நாளில் இருந்து சிறிதும் பெரிதுமாகப் பல முன்னணி நிதியியல் சேவை நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கியும், சென்னையை நோக்கியும் படையெடுக்கத் துவங்கியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு சென்னையில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க உள்ளது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு சென்னையில் சுமார் 1 மில்லியன் சதுரடியில் பிரம்மாண்ட அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு புதிதாக அமைக்க உள்ள குளோபல் பிஸ்னஸ் சர்வீசஸ் கேம்பஸ் அலுவலகத்தை டிஎல்எப் நிறுவனம் கட்டமைக்க உள்ளது, 2024 ஜூன் – ஜூலையில் கட்டுமான பணிகளை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎல்எப் நிறுவனம்
டிஎல்எப் நிறுவனம் தரமணியில் சுமார் 27 ஏக்கர் நிலத்தில் சுமார் 65 லட்சம் சதுரடியில் அலுவலகத்தைக் கட்டும் DLF Downtown என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

DLF Downtown திட்டம்
2023க்குள் 23 லட்சம் சதுரடி அலுவலகக் கட்டுமான பணிகள் முடிவடையும், மொத்த திட்டமும் 2026க்குள் முடியும். இதுவரையில் DLF Downtown Chennai திட்டத்திற்காகச் சுமார் 1600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக டிஎல்எப் நிர்வாகத் தலைவர் ஸ்ரீராம் கத்தார் தெரிவித்துள்ளார்.

1300 கோடி ரூபாய் வாடகை
சென்னை தரமணியில் செயல்படுத்தி வரும் DLF Downtown Chennai திட்டம் முழுமையாக முடிந்த பின்பு அலுவலகத்தின் வாடகை வாயிலாக மட்டும் சுமார் 1300 கோடி ரூபாய் வரையில் பெற முடியும் என டிஎல்எப் நம்புகிறது. மேலும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனத்தின் 10 லட்சம் சதுரடி அலுவலகத்திற்கான அடிக்கல்-ஐ தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நாட்டினார்.

இங்கிலாந்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட உலகம் முழுவதும் இயங்கி வரும் பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு சுமார் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,200 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் அலுவலகங்களைக் கொண்டு இயக்கி வருகிறது. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனத்தில் மட்டும் சுமார் 87,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நுகர்வோர், கார்பரேட் மற்றும் நிறுவன வங்கி மற்றும் கருவூல சேவைகளில் செயல்படும் உலகளாவிய வங்கி சேவை நிறுவனமாகும். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பிரிட்டன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும் பிரிட்டன் நாட்டில் ரீடைல் வங்கி சேவைகளை அளிப்பது இல்லை. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனத்தின் 90% லாபத்தை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Standard Chartered setting up new campus in Chennai; DLF to invest 550 crore
Standard Chartered setting up new campus in Chennai; DLF to invest 550 crore சென்னையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு-க்கு பிரம்மாண்ட அலுவலகம்.. ரூ.550 கோடியில் கட்டும் DLF..!