தங்கவயல்–தங்கவயல் விவேக் நகர் நான்காவது கிராசில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று முன் தினம் மாலை கணபதி பிரார்த்தனை, பிரவேச பலி, ஸ்வஸ்தி வாசனம், புண்ணியாகம், கலச அர்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பிம்ப அஸ்தி, அதி வாச அஷ்டபந்தன, நாடி சந்தானம், மஹா மங்களார்த்தியுடன் நடந்தது.நேற்று காலை 7:10 மணிக்கு நவக்கிரஹ பரஸ்பர கணபதி ஆராதனை, நித்யார்ச்சனை ஹோமம், மூர்த்தி ஹோமம், கலாஹோமம், பூர்ணாஹுதி, கும்பாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், நேத்ரோணம், புஷ்பார்ச்சனை, பிம்ப தரிசனம், மஹா மங்களார்த்தி நடந்தது.அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி, 5 யாக குண்டங்கள், 70 கலசங்கள் வைத்து மந்திரங்கள் முழங்கப்பட்டது. அர்ச்சகர் கார்த்திக் தலைமையில் ஆறு அர்ச்சகர்கள் யாக பூஜைகளை நடத்தினர். கணபதி, பாலமுருகன், நாகதேவதை விக்ரஹங்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.இப்பூஜை ஏற்பாடுகளை அண்ணாமலை அறக்கட்டளை தலைவர் புண்ணிய மூர்த்தி, கார்த்திக், மணி, மகேந்திரன், தீபக், ஆகியோர் செய்திருந்தனர்.
Advertisement