திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
மார்ச் 18ஆம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கோவி.செழியன் அறிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல் நாள் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.