திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தந்தை? – பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி – மகள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூரைச் சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி பாக்கியம், மகள் பவித்ரா. ரவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தன் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா, அவரைப் பிரிந்து கடந்த ஒரு வருடமாக தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது இடையர் வலசை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த பவித்ராவின் தந்தை ரவி அவரைக் கண்டித்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட ரவி

ஆனால், பவித்ரா தன் தந்தையின் கண்டிப்பை மீறி முருகானந்தத்துடன் பழகி வந்திருக்கிறார். இந்த விஷயம் தெரிந்தும் ரவியின் மனைவி அவரைக் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், ரவி தன் மனைவி, மகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

தந்தையின் செயலால் ஆத்திரமடைந்த பவித்ரா, தன் தாய், முருகானந்தம் ஆகியோருடன் சேர்ந்து அவரை கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். கடந்த 8-ம் தேதி இரவு ரவி வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பவித்ரா தன் தாய், முருகானந்தம் ஆகியோரின் உதவியுடன் ரவியை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.

ரவி அலறி துடித்து இறந்ததும், அக்கம்பக்கத்தில் கூச்சலிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியிருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ரவியின் மரணத்தை முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

ரவி மகள் பவித்ரா

போலீஸார் பவித்ரா, அவர் தாய் ஆகியோரிடம் விசாரித்தபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கின்றனர். அதனால், சந்தேகமடைந்தவர்கள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பவித்ரா முருகானந்தத்துடன் பழகுவதற்கு இடையூறாக இருந்ததால் தந்தையைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ரவி மனைவி பாக்கியம்
முருகானந்தம்

அதையடுத்து, போலீஸார் பவித்ரா அவர் தாய், முருகானந்தம் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.