திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி, திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஆரணியைச் சேர்ந்த ஜெயசீலன் – சுகந்தி தம்பதி புதுச்சேரியில் உள்ள மகளை சந்தித்துவிட்டு ஆரணி நோக்கி தங்களது ரெனால்ட் க்விட் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சேத்துப்பட்டு சாலையில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பொதுமக்கள் காரில் இருந்த இருவரையும் படுகாயங்களுடன் மீட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே கார் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.