பெங்களூரு-அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சினிமா பார்ப்பதற்கு, கர்நாடக சட்டசபை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்துள்ளது.காஷ்மீரில், 1980 – 90 களில் இருந்த சூழ்நிலையை மையமாக கொண்டு வெளிவந்துள்ள ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் நாடு முழுதும் திரைக்கு வந்துள்ளது.பெங்களூரு யஷ்வந்த்பூரில் உள்ள ஓரியன் மாலின் பி.வி.ஆர்., திரையரங்கில் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் சினிமா பார்த்தனர்.இந்த சினிமாவுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். அனைவரும் கட்டாயம் பார்க்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.இந்நிலையில் சட்டசபையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி நேற்று மதியம் பேசியதாவது:கர்நாடக சட்டசபை அமைச்சகம் ஏற்பாட்டில், அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ‘தி காஷ்மீர் லைப்’ சினிமாவை, மந்த்ரி மாலில் நாளை (இன்று) மாலை 6:45 மணிக்கு பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.ஆறாவது திரையில் சினிமா பார்க்கலாம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தவறாமல் சினிமா பார்க்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து செல்லலாம். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தவறாமல் வர வேண்டும்.சினிமாவுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளித்த முதல்வருக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement