தூத்துக்குடி-பெங்களூரு இடையே மார்ச் 27 முதல் தினசரி விமான சேவை

தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,350 மீட்டராக உள்ள நிலையில், அதனை ரூ.380 கோடியில் 3,115 மீட்டராக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி-பெங்களூரு இடையே வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தூத்துக்குடி-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யும் ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.