தென்னிலங்கை அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக மந்திரவாதி ஒருவர் செயற்பட்டு வருகிறார்.
அனுராதபுரத்தில் இருந்து செயற்படும் ஞானக்காவை சந்திக்க ஜனாதிபதி கோட்டபாய உட்பட பலரும் அங்கு சென்று வருகின்றனர்.
தமது அரசியல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல ஞானக்காவின் ஆலோசனை பெறுவது இவர்களின் பிரதான கடமையாக உள்ளது.
ஞானக்காவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி இராணுவ உயர் அதிகாரிகளும் முழுமையாக நம்புவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்ட பின்னர் ஞானக்காவை சந்திக்க சென்ற போது அங்கு கோட்டபாய ராஜபக்ஷ இருந்தார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு ஜனாதிபதியுடன் நட்புறவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதாக இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தான் மட்டுமல்ல ஹரின் பெர்னாண்டோ, தலதா அத்துகோரள, மைத்திரிபால சிறிசேன, ஹேமா பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், உயர் இராணுவத் தளபதிகள் மற்றும் பிரதம நீதியரசர்களும் அங்கு வருவதாக கம்மன்பில கூறியுள்ளார்.
நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது என ஆலோசனை பெறுவதற்காக அங்கு செல்வதில்லை. சில பரிகாரங்களை மேற்கொள்வதற்காகவே செல்கின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது நோய்களுக்கு மருந்து எடுக்க தான் அங்கு செல்வதாகவும், அந்த மருந்துகளால் தனக்கு பலன் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் போது நாட்டை ஆட்சி செய்யும் தலைவர் ஞானக்காவா என முன்னாள் அமைச்சரிடம் வினவிய போது, ஞானக்கா அரசியல் செய்ய மாட்டார்.
கட்சி அரசியல் செய்வதாக இருந்தால் அனைத்து கட்சியினரும் அங்கு செல்வதில்லை. இராணுவ பிரதானிகள், நீதிபதிகள் உட்பட பலர் அங்கு செல்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.