நாடாளுமன்றத்துக்கு நாலு நாள் லீவு… காரணம் இதுதான்!

வசந்த காலத்தின் வருகையை குறித்தும் விதத்தில்
ஹோலி பண்டிகை
கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மிகவும் பிரபலான இப்பண்டிகை நாளில் பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகள், சாயங்களை வாரி இறைத்தும், தண்ணீரை பிய்ச்சி அடித்தும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் தங்களுக்கு பிடித்தமான அரசியல், சினிமா பிரபலங்களுக்கும் மக்கள் வாழ்த்துக் கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹோலிப் பண்டிகை வழங்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை என்பதால் இந்த முறை வட்டியும், முதலுமாக சேர்த்து வைத்து கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.,

இதையொட்டி நாடாளுமன்றத்துக்கு
நான்கு நாட்கள் விடுமுறை
அளிக்கப்பட உள்ளதாக குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயருமான
வெங்கய்ய நாயுடு
அறிவித்துள்ளார்.

மே 20 அரை நாள் பள்ளிகள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அதாவது ஹோலி பண்டிகையையொட்டி வரும் 17, 18 ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்துக்கு விடுமுறை எனவும், அதனை தொடர்ந்து வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை என நாடாளுமன்றத்துக்கு நான்கு நாட்கள் விடுமுறை என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 14 ) ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.