12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை மட்டுமே சிறார்களுக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களுக்குப் பின் 2வது டோஸ் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறார்கள் மட்டுமே இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது. கோவின் செயலி மூலமாகவே தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளளது.