நேட்டோவில் உக்ரைன் இணையப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கீவ்: உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு (செவ்வாய்) முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேட்டோவில் உக்ரைன் இணையப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தகவலை ரஷ்யா அரசு செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணையப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.கீவ்: உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன. மேலும், பொதுமக்கள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.