மாஸ்கோ: நேரலை நிகழ்ச்சியில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் சேனல் ஒன் நிறுவன ஊழியர் மரியா ஓசியனிகோவா. இவர் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தும் போருக்கு எதிரான பதாகை ஒன்றை ஏந்தி வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனை அடுத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்து ரஷ்ய போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இவரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரஷ்யப் படைகள் நடத்தும் போருக்கு எதிராக அந்நாட்டு குடிமக்கள் பலர் தலைநகர் மாஸ்கோவில் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். முன்னதாக ரஷ்ய விமானி ஒருவர் ஒலிபெருக்கியில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குற்றச் செயல் என்று அறிவித்தது ரஷ்ய அரசை அதிருப்தி அடையச் செய்தது. தற்போது செய்தியாளர் மரியாவின் இந்த செயல் விளாடிமிர் புடின் அரசை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோ: நேரலை நிகழ்ச்சியில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.nsimg2983989nsimgரஷ்யாவின் சேனல் ஒன் நிறுவன ஊழியர் மரியா ஓசியனிகோவா. இவர் தொலைக்காட்சி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.