சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், துணை ஆணையர் நடராஜன், தனது துறையில் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்களிடம் ரூ3 லட்சம் முதல் ரூ5 லட்சம் வரை பணம் பெற்றதாக லஞ்சம் ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில், துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்புத் துறை திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.